வயது 79
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு, Sri Lanka கொழும்பு, Sri Lanka Basel, Switzerland
கொழும்பு உம்பிச்சி பிளேஸ், சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை மீனாம்பாள் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-03-2026
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை நான்கு அகன்றே
நின்றாலும் அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி உறவிலே
கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்: குடும்பத்தினர்
