தேசிய பாடசாலைகளில் தரம் 6இற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கும், வருமானம் குறைந்த மாணவர்களுக்கு மாதாந்த உதவிப்பணம் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்கு வருடாந்தம் நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி நடைபெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசாங்கப் பாடசாலை ஒன்றில் அல்லது அரசாங்க அனுமதிபெற்ற தனியார் பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்
இன்று – மார்ச் 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நிகழ்நிலை வாயிலாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவுறுத்தல்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
