குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும் இடத்தில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (30) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

1990ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடியை நோக்கி வந்துகொண்டிருந்த போது குருக்கள்மடத்தில் வைத்து விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்து புதைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில் தோண்டுமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் நீதிபதியின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

மேற்குறித்த பகுதியில் சட்டத்தரணிகள் துறைசார் அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இப்பகுதி பூராகவும் தற்போது பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles