பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ். மணிக்கூட்டு வீதி, பெருமாள் கோவிலடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Paris வாழ்விடமாகவும் கொண்ட முருகேசு சுந்தரம் குணசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அன்பினில் அரவணைப்பில்
இன்பமாய் வாழ்ந்திருந்தோம் – நீங்கள் இன்றி
இன்று நாம் தவிக்கின்றோம் ஆறாத்துயருடன்
உங்கள் பாசத்திற்காய் ஏங்குகின்றோம்
அளவிலா அன்பையும் பாசத்தையும் தந்து – உங்கள்
கண்களுக்குள் வைத்து வழிகாட்டினீர்கள்
நாட்கள் முப்பத்தொன்று நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
உங்களை நாங்கள் மறந்தால் தானே நினைப்பதற்கு
வானுலகம் சென்றாலும் எங்கள் வழித்துணையாய்
என்றென்றும் எம் நினைவில் நீக்கமற நிறைந்திருப்பீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய அனுதினமும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்து இவ்வுலகு”
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி உரை நிகழ்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 30-03-2026 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
