யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த
சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரது சடலம் இன்று(31) காலை பருத்தித்துறை வியாபாரி மூலை பகுதியில் கடலில் இருந்து கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என உறவுகள் தேடிக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கிராம வாசிகளால் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நேற்றிலிருந்து காணாமல் போனவர் அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் என்பவர் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பருத்தித்துறை பொலிசார் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
