தையிட்டியில், தமிழ் மக்களின் காணியில் எந்தவித அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு பௌர்ணமி தினங்களிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், நேற்று மாலை 4.00 மணிக்கு ஆரம்பமான போராட்டம் மாலை 6.00 மணிக்கு நிறைவடைந்து இன்று காலை முதல் மாலை வரை மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
