2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன.
இதன்படி, 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று 64 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இதில் உயிரியல் அறிவியல் பாடத்தெரிவில் 19 மாணவர்கள், இயற்பியல் அறிவியல் பாடத்தெரிவில் 42 மாணவர்கள், வர்த்தகப் பிரிவில் 1 மாணவர் மற்றும் கலைப் பிரிவில் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மேலும், 2 ஏ பெறுபேறுகளைப் பெற்று 31 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஏ 2 பி பெறுபேறுகளைப் பெற்று 21 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
