வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு நேற்று(02) கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 1500இற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
