வவுனியாவில் வீடு ஒன்று தீக்கிரையானது

வவுனியா மகாறம்பைக்குளம் மதீனாநகர் பகுதியில் வீடு ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்ப்பட்டதையடுத்து அங்கிருந்த பெறுமதியான பொருள்கள் எரிந்துள்ளன.

இன்று(02) மாலை குறித்த வீட்டில் யாரும் இல்லாத நேரம் வீட்டின் உள்பகுதி தீயில் எரிவதை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அதனை அணைப்பதற்கு அவர்கள் முயற்சி எடுத்தபோதும் அது பலனளிக்காத நிலையில் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த விபத்தினால் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

மின்சார ஒழுக்கு காரணமாக வீட்டில் தீ ஏற்ப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles