777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி கனடாவில் வசிக்கும் ஈழத்து பெண் உலக சாதனை மேற்கொண்டார். குறித்த காட்சிப்படுத்தும் நிகழ்வு நேற்று (01.04.2026) இரவு 7 மணியளவில் முறிகண்டியில் இடம்பெற்றது.
கனடாவில் வாழும் ஈழத்து பெண்ணான ஆயுள்வேத வைத்தியர் குமுதினி கோபாலகிருஸ்ணன் குறித்த கின்னஸ் சாதனைக்காக குறித்த நிகழ்வை நடத்தினார்.
இதற்கு முன்னர் அமெரிக்கர் ஒருவர் 527 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிபடுத்தி கின்னஸில் இடம் பிடித்திருந்தார்.
குறித்த சாதனையை தாண்டி 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து குறித்த சாதனையை இவர் பதிவு செய்தார்.
இந்த உலக சாதனை நிகழ்வு Guitar All Herbal Products நிறுவனத்தின் அனுசரணையோடு கிளிநொச்சி முறிகண்டியில், மூவரடங்கிய நடுவர் குழாம் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட குமுதினி கோபாலகிருஷ்ணன், கனடாவில் வசித்து வருவதுடன், ஆயுள்வேத வைத்தியராக சேவை செய்து வருகின்றார்.
கேண்டில்ஸ் பியூட்டி(Candle Beauty) நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் திகழ்கிறார்.
தனது 30 வருட கால முயற்சியின் பயனாக தாய்நாட்டில் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தமை பெருமைக்குரிய விடயம் என குமுதினி கோபாலகிருஷ்ணன் இதன்போது தெரிவித்துள்ளார்.
