உயிர்த்த ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிப்பு

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மகிழ்ச்சியுடன் உயிர்த்த ஞாயிறு தினம் இன்று (05) கொண்டாடப்படுகின்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் நாளாக உயிர்த்த ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகின்றது.

மரணத்தை வென்று அவர் மீண்டும் உயிர் பெற்றதன் மூலம், தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதை இந்த நாள் பறைசாற்றுகின்றது.

இதனை முன்னிட்டு, தேவாலயங்களில் விசேட திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இதன்போது மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு ‘ஒளியின் வழிபாடு’ சிறப்பாக நடத்தப்படும்.

40 நாட்கள் தவக்காலத்தை நிறைவு செய்யும் விதமாக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.

இதேவேளை நாடு முழுவதும்  உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles