ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.
சென்னை அணியின் இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை புவனேஷ்வர் குமார் பெற்றார்.
இதுவரை 192 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 27.25 என்ற சராசரியில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதற்கு முன்னதாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் மட்டுமே 200 விக்கெட்டுகளைக் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
