போர் நிறுத்தத்தின் போது ஹோர்முஸ் வழியைப் பயன்படுத்த கட்டணம்

ஈரானில் இரண்டு வாரகால போர் நிறுத்தம் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இரண்டு வார கால போர் நிறுத்தத்தின்போதும் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்குப் போக்குவரத்து கட்டணம் வசூலிக்க ஈரான் மற்றும் ஓமான் திட்டமிட்டுள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியானது, புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையானது மூடப்பட்டுள்ளது. போருக்கு முந்தைய கப்பல் போக்குவரத்தின் அளவில் சுமார் 5வீதம் மட்டுமே தற்போது கடந்து செல்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் தங்கள் கொடியிடப்பட்ட சில கப்பல்கள் செல்வதற்கு அனுமதியைப் பெற ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

ஹோர்முஸ் வழியாக செல்வதற்கு ஒரு கப்பலுக்கு இரண்டு மில்லியன் டொலர் வரையிலான கட்டணத்தை ஈரான் வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles