தனது 14ஆவது வயதில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி, மூன்று ‘ஏ’ சித்திகளைப் பெற்று மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்த சுமனா தம்ம என்ற இளம்பிக்கு.
மூன்றரை வயதிலேயே துறவறம் பூண்ட இந்தப் பிக்கு , தனது 12 வயதில் சாதாரண தரத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள ஸ்ரீ கிருலாஸ்ரம விகாரையில் இருக்கும் இந்த இளம் பிக்கு சமூக வலைத்தளங்களிலும் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
