அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அவரது திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி இன்று வியாழக்கிழமை நல்லூர் – தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து புறப்பட்டது.
இவ்வாறு புறப்பட்ட ஊர்தியானது வடக்கு – கிழக்கு முழுவதும் ஊர்வலமாக சென்று இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாகி அன்னை பூபதியின் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.
பின்னர் அங்கு இறுதி நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
