எப்ஸ்டீனுடன் எனக்கு தொடர்பா? ட்ரம்ப்பின் மனைவி கூறிய பதில்

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் எப்ஸ்டீன் விவகாரத்தில் மெலனியாவுக்கும் தொடர்பு இருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், ‘என்னை எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தும் பொய்கள் இன்றே முடிவுக்கு வர வேண்டும். இவை என் மீதான அவதூறுகள்,’ என்று கூறியுள்ளார்.

தன் மீது ஆதாரமற்ற புகார்களைக் கூறுபவர்களைச் சாடிய மெலனியா, ‘என்னை பற்றி பொய் சொல்பவர்களிடம் அறநெறி, பணிவு மற்றும் மரியாதை ஆகியவை அறவே இல்லை. அவர்களின் அறியாமையை நான் எதிர்க்கவில்லை, மாறாக எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கீழ்த்தரமான முயற்சிகளை நான் நிராகரிக்கிறேன்,’ என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் இந்த அறிக்கையை வாசித்த அவர், எப்ஸ்டீனுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், தானும் தனது வழக்கறிஞர்களும் இத்தகைய அடிப்படையற்ற பொய்களை வெற்றிகரமாகத் தடுத்துப் போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு பெண்ணும் விரும்பினால், தனது கதையைப் பொதுவெளியில் சொல்வதற்கான நாள் அவளுக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நமக்குத் தெரியவரும். – என்றார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles