ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் மாயமாக அமெரிக்க டிரோன்

அமெரிக்​கா, ஈரான் இடையே தற்​காலிக போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்டுள்ளது. இதன்​படி ஹோர்மூஸ் ஜலசந்தி பகு​தி​யில் சரக்​கு, எண்​ணெய் கப்​பல்​களை அனு​ம​திக்க ஈரான் ஒப்​புக் கொண்​டது.

இதை கண்​காணிக்க அமெரிக்க கடற்​படை​யின் எம்​கியூ-4சி டிரைட்​டன் என்ற ஆளில்​லாத உளவு ட்ரோன் நேற்று ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டது. சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து பறந்த அமெரிக்க உளவு ட்ரோன் திடீரென மாய​மானது. இந்த ட்ரோன் சுட்டு வீழ்த்​தப்​பட்​டதா அல்​லது கீழே விழுந்து நொறுங்​கியதா என்​பது குறித்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

அமெரிக்க கடற்​படை​யிடம் மொத்​தம் 20 எம்​கியூ-4சி டிரைட்​டன் ட்ரோன்​கள் மட்​டுமே உள்​ளன. ஒரு ட்ரோனின் விலை சுமார் ரூ.1,700 கோடி ஆகும். இந்த ட்ரோன் சுமார் 50,000 அடி உயரத்​தில், தொடர்ச்​சி​யாக 24 மணி நேரம் பறக்​கும் திறன் கொண்​டது. ஒரே நேரத்​தில் 7,400 கடல் மைல் தொலைவு பகு​தி​களை கடந்து கண்​காணிக்​கும் திறன்​கொண்​டது. இந்த அதிநவீன ட்ரோன் மாய​மாகி இருப்​பது பல்​வேறு சந்​தேகங்​களை எழுப்பி உள்​ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles