ஈரானுக்கு உதவினால் சீனா மிகப்பெரும் பிரச்சினையை சந்திக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் மிகப் பெரும் பிரச்சினையை சந்திக்க நேரிடும் என சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியிலிருந்து இஸ்ரேல், அமெரிக்க – ஈரானுக்கிடையிலான போர் நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது இரண்டு வார கால போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நிரந்தர போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று முதல் இன்று வரை நீடித்த நிலையில், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

இது இவ்வாறிருக்க எப்போது வேண்டுமானாலும் இந்த தற்காலிக போர் நிறுத்தம் தகர்த்தெறியப்படும் சூழலில் 3ஆவது நாடு மூலமாக சீனா ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், இத்தகவல் அடிப்படை ஆதாரம் இல்லாதது என சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த நிலையில் ஈரானுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டம் வழங்கினால் சீனா மிகப்பெரும் பிரச்சினையை சந்திக்கும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles