தங்கையின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கிக்கொடுத்த மாணவன்

யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன், தனது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவின் போது உறவினர் ஒருவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட தங்க மோதிரத்தைக் களவாடி விற்று காதலிக்கு ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.

யாழ். நகருக்கு அண்மித்த பகுதியில் அண்மையில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. அன்றைய தினம் உறவினர் ஒருவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட தங்க மோதிரம் மாயமானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

இந்நிலையில் மாணவனின் காதலியான பாடசாலை மாணவியின் வீட்டில் ஐபோன் குறித்து எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, மாணவியின் உறவினர்கள் நடத்திய விசாரணைகளில் குறித்த மாணவனே ஐபோன் வாங்கி தந்தார் என கூறியதை அடுத்து மாணவனின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன் போதே தங்கையின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த உண்மையை மாணவன் ஒப்புக்கொண்டுள்ளான்.

இருவரும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்று வரும் நிலையில், இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தங்கைக்கு கொடுக்கப்பட்ட நகையை களவாடி விற்று காதலிக்கு ஐபோன் வாங்கி கொடுத்த சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles