நாகர் கோயிலில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 6 பேர் கைது

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில்  சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கடற்படையினர் நடத்திய  விசேட தேடுதலில்;
நடவடிக்கையில் சட்டவிரோதமாக இரவு சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடல் அட்டைகளை கரைக்கு கொண்டு வந்த சுமார் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்;

வடக்கு கடற்படை கட்டளை பீடத்தின் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு சிறுபடகுகள் சோதனையிடப்பட்டன.

அங்கு, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கடல் அட்டைகளைப் பிடித்து கரைக்கு கொண்டு வந்த ஆறு பேரையும் அவர்கள் வைத்திருந்து 939 கடல் அட்டைகள் இரண்டு படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்களும் அவர்களிடமிருந்து மீட்டகப்பட்ட பொருள்களும் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles