பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 92.

மும்பையில் உள்ள கேண்டி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார்.

கடந்த 1933இல் மகாராஷ்டிராவில் உள்ள சங்க்லியில் அவர் பிறந்தார். சிறு வயதிலேயே தனது இசைப்பயணத்தை அவர் தொடங்கினார். பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். இதில் இசையின் பல்வேறு வகைளும் அடங்கும். 1950களில் தேசம் பரவலாக அறியப்பட்ட நட்சத்திர பாடகராக உயர்ந்தார்.

தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர் ஆகியோரது இசையில் அவர் பாடல்களைப் பாடியுள்ளார். இசையில் அவரது பங்களிப்பை போற்றும் வகையில் தாதாசாஹேப் பால்கே விருது, பத்ம விபூஷண் விருது ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டன.

அவரது மறைவையடுத்து திரை உலகினர், இசைத்துறையினர், பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles