பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினாரா என்பது தொடர்பில் விசாரணையை தொடங்குவதற்கு ஏதுவாக 15 தொழிற்கட்சி எம்.பிகள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
லார்ட் மாண்டல்சன் அமெரிக்காவிற்கான தூதராக நியமிக்கப்பட்டது தொடர்பாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த வாக்களிப்பு வந்துள்ளது.
223க்கு 335 என்ற வாக்கு வித்தியாசத்தில் வாக்களிக்கப்பட்ட அதேநேரம் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர்.
இரு எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், லார்ட் மாண்டல்சனின் நியமனம் தொடர்பாக ஸ்டாமர் சபையைத் தவறாக வழிநடத்தினாரா என்பது குறித்து சிறப்புரிமைக் குழு விசாரணை நடத்தக் கோரி, சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோயிலுக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த சிறப்புரிமைக் குழுதான், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் ‘பார்ட்டிகேட்’ குறித்த விசாரணையை நடத்தியிருந்தது. அதுவே அவரது பதவிக்காலத்தை முடிவுக்கு கொண்டுவரவும் வழிவகுத்தது.
