சுவிற்ஸர்லாந்து சந்திப்பு: எண்ணெய் விலை மேலும் சரிவு!

ற்அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுவிட்ஸர்லாந்தில் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமையன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஏற்றுமதிக்கான தடைகளில் இருந்து விலக்கு பெற்றுள்ளதாக ஈரான் அறிவித்ததை அடுத்து, உலக சந்தையில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் தணிந்து இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 1.53 டொலர்கள் (1.90%) சரிந்து 79.04 டொலர்களாக குறைந்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விடுத்த போர் மிரட்டல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது போன்ற காரணங்களால், வர்த்தகத் தொடக்கத்தில் இதன் விலை 82.30 டொலர்கள் வரை உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கும் நோக்கில், கடந்த வாரம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திங்களன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாக் அக்காசி கூறுகையில்,

“எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஏற்றுமதிக்கான தடைகளில் இருந்து விலக்கு, முடக்கப்பட்டுள்ள சில சொத்துக்களை விடுவித்தல் மற்றும் ஈரானுக்கான மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குதல் ஆகியவற்றுக்கான உத்தரவாதங்களை ஈரான் பெற்றுள்ளது.” – என்றார்.

இரு நாடுகளும் இணைந்து ஒரு “உயர்நிலைக் குழுவை” அமைக்க ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர் டோனி சிகாக்கமோர் (Tony Sycamore) தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், கள நிலவரத்தில் அது எந்தளவுக்கு மாற்றத்தைக் கொடுக்கும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

குறிப்பாக, தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்களது மோதல்களைத் தொடரவே முற்படுகின்றனர். – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles