Wednesday, February 4, 2026
Home25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா- ஏ.ஆர்.ரகுமான் இணையும் புதிய படம்..!

25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா- ஏ.ஆர்.ரகுமான் இணையும் புதிய படம்..!

பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா கதாநாயகனாக ஏ.ஆர். ரகுமான் இசை கூட்டணியில் புதிய படத்தை முதன் முதலாக ‘பிகைண்ட்வுட்ஸ்’ சார்பில் மனோஜ் தயாரித்து, இயக்க உள்ளார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா- ஏ.ஆர் ரகுமான் இந்த திரைப்படம் மூலம் மீண்டும் இணைகின்றனர்.

இப்படத்தில் இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன.

காமெடி நடிகர் யோகி பாபு இதில் வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.”

இன்னும் பெயரிட படாத இந்த படத்திற்கு சில மாதங்களில் தலைப்பு வெளியிடப்பட உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணையும் 6-வது கூட்டணியை குறிக்கும் வகையில் ‘arrpd-6’ என தற்காலிகமாக இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற ‘மே’ மாதம் தொடங்குகிறது. 2025 – ல் இப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular