Sangathy
Newsமரண அறிவித்தல்

Rt. Hon. Nagendrar Ladchumanarajah passed away

அமரர் நாகேந்திரர் லட்சுமணராசா

 

அன்னையின் மடியில்:07-12-1942      ஆண்டவன் அடியில்:10-11-2022

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பரவைக்குளத்தை வதிவிடமாகவும், நெடுந்தீவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரர் லட்சுமணராசா அவர்கள் 10-11-2022 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகேந்திரர்(முன்னாள் நெடுந்தீவு கிராமசபைத் தலைவர், கொடிவேலி விதானையார்) செல்லம்மா நாகேந்திரர்(இலங்கையின் முதலாவது பெண் கிராமசபைத் தலைவி- நெடுந்தீவு கிராமசபை) தம்பதிகளின் அன்பு மகனும், சரவணமுத்து இராசேந்திரம்(விதானையார்- புங்குடுதீவு) பூபதி இராசேந்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கௌரி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(விதானையார்), அமிர்தரட்ணராஜா(இளைப்பாறிய பாடசாலை அதிபர்- அடம்பன், கனடா), இராமநாதன்(பாலசிங்கம் பொறியியலாளர்- லண்டன்), செல்வரத்தினம்(எழுதுவினைஞர்), இராஜேஸ்வரி(ஆசிரியை- கனடா) மற்றும் நவயோகம்(இளைப்பாறிய ஆசிரியை- லண்டன்), நாகேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை- நெடுந்தீவு), இராமச்சந்திரன்(இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்- நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சற்குணம், அமிர்தம், அன்னலட்சுமி(கனடா) மற்றும் ஞானாம்பிகை(லண்டன்), யோகம்மா(ரத்தினம்- லண்டன்), கந்தையா, சுவாமிநாதன், நாகபூசணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேந்திரன், நரேந்திரன், மகேந்திரன், கௌசலா, பிரேமா, நிம்மி, ரவீந்திரன், சர்வேந்திரன், பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்..

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் 30/1 நீக்கிலஸ் ஒழுங்கை, கச்சேரிநல்லூர் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இறுதிக் கிரியையில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

தகவல்: பெறாமக்கள்

தொடர்புகளுக்கு

Related posts

Thico scam: Police receive 12 complaints

Lincoln

Speaker orders out SJB’s Wijesiri

Lincoln

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(20) இந்தியாவிற்கு விஜயம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy