அமரர் செல்லத்துரை சச்சிதானந்தன்

 

மண்ணில்17 APR 1966, விண்ணில்17 NOV 2021

வயது 55

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 08ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை சச்சிதானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:06/12/2022.

உங்கள் அழகிய திருமுகம் பார்த்து
ஓராண்டு நினைவுநாள் வந்ததோ
எண்ணில் அடங்காத நற்குணங்கள்
அத்தனைக்கும் ஏக தலைவனாக
இன்புற்று வாழ்ந்த உன்னைக்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கவர்ந்து சென்ற காலனின்
கருணையற்ற செயலால்
கலங்குதே எனது உள்ளம் காலங்கள்
எல்லாம் வாழ்வதாய் என
காத்திருக்க காலன் உன்னை
அழைத்ததென்ன? கண்ணீரில்
எனை விட்டு…. நெஞ்சில் நீங்கா
துயர் இட்டு நீ போன
தென்ன என்னை விட்டு…..

ஒரு வருடமாக அகலாத
நினைவோடு நான் உங்கள்
உருவம் எங்கே என்று
தேடுகின்றேம் எண்திசையும்
வீசுகின்ற காற்று என்னில்
படும்போது நீங்கள் வந்து
அழைப்பது போல் ஓர் உணர்வு
ஆனால் உங்கள் முகத்தை மட்டும்
காண முடியவில்லை ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் நீங்கள்
இல்லாத இவ்வுலகில் இருள்
அடைந்து போன உலகத்தில்
இருப்பது போல் உணர்கிறேன்!!

என்றும் என் அருகில் நின்று
காத்து நிற்பீர்கள் என எண்ணி
காத்திருக்கிறேன்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்……

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles