Sangathy
News

இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

Colombo (News 1st) இன்று(29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. தற்போது 400 ரூபாவிற்கு விற்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 340 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. தற்போது 510 ரூபாவிற்கு விற்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோலின் புதிய விலை 375 ரூபாவாக அமையவுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாக அமையவுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 510 ரூபாவிலிருந்து 465 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது.

305 ரூபாவிற்கு விற்கப்பட்டும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 295 ரூபாவிற்கு விற்கப்படவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

COPE recommends closure of loss-making overseas branches of SLIC

Lincoln

கடலுக்கடியில் மறைந்துள்ள 8 ஆவது கண்டம்: புதிய வரைபடத்தை வௌியிட்ட ஆய்வாளர்கள்

Lincoln

2022 கல்வியாண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy