Sangathy
News

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

Colombo (News 1st) ஊழலுக்கு எதிரான சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

சொத்துகள் மற்றும் பொறுப்புகளுடன் தொடர்பான ஊழல் மோசடி – தவறுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களை வௌிக்கொணர்வதும் விசாரணை செய்வதும் இந்த சட்டமூலத்தின் பிரதான இலக்காகும்.

இதனுடன் தொடர்புடைய வகையில் சுயாதீன ஆணைக்குழுவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

நாட்டில் அரச மற்றும் தனியார் பிரிவுகள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் ஊடாக இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதியின் பரிந்துரைகளில் ஒன்றாக ஊழலை தடுத்தலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட சில தொழில்நுட்ப ரீதியிலான விடயங்களும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

South Korea: Seoul mayor takes own life after sexual harassment allegations

Lincoln

Audit reports reveal mysterious disappearance of PMB’s paddy stocks

Lincoln

சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy