கண்ணாடியில் விரிசல்; துபாய்க்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

Colombo (News 1st) துபாய் நோக்கி புறப்பட்ட விமானத்தின் கண்ணாடியில் விரிசல்; மீண்டும் கட்டுநாயக்கவிற்கு திரும்பியது

சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான U.L. 225 இலக்கம் கொண்ட விமானமே தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்று (07) மாலை 06.25 மணிக்கு குறித்த விமானம் துபாய் நோக்கி பயணிக்கவிருந்தது. எவ்வாறாயினும், குறித்த விமானம் இன்று காலை 09.30 மணிக்கே பயணத்தை ஆரம்பித்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 1 மணித்தியாலம் 10 நிமிடத்தின் பின்னர், அதாவது காலை 10.40 மணிக்கு குறித்த விமானம் மீண்டும்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானிக்கு முன்பாகவுள்ள கண்ணாடியில் ( windshield ) விரிசல் ஏற்பட்டமையால் விமானம் தரையிறக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானம் இந்தியாவை அண்மித்து பயணித்துக்கொண்டிருந்த வேளையில், கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டு, விமானி விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி திரும்பியதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் விமானத்தில் 189 பயணிகளும் 15 ஊழியர்களும் இருந்துள்ளனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles