சக்தி TV ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நாளை (09) தலவாக்கலையில்

Colombo (News 1st) தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சக்தி TV ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வும் மாபெரும் இசை நிகழ்சியும் நாளை (09)  தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.

நாளை காலை முதல் தமிழ் சிங்கள பாராம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றவுள்ளன.

நாளை காலை மரதன் ஓட்டப் போட்டியுடன் ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் , தலையணை சண்டை, வழுக்கு மரம் ஏறுதல், விநோத உடை போட்டி, யானைக்கு கண் வைத்தல், பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், சட்டி உடைத்தல் போன்ற போட்டிகளும் நடைபெறவுள்ளன.

போட்டிகளுக்கான  அனைத்து ஏற்பாடுகளும் தலவாக்கலை மைதானத்தில் பூர்த்தியாகியுள்ளன.

இதேவேளை, மாபெரும் இசை நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு தலவாக்கலை நகர சபை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் முன்னணி இசைக்குழுவான சூர்யாசின் இசையில் தென்னிந்திய பின்னணி பாடகர்களான V.M.மகாலிங்கம் , ரக்சிதா  ஆகியோருடன் உள்நாட்டுக் கலைஞர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles