Sangathy
News

குரங்குகளை பிடிப்பதற்காக விசேட பயிற்சி

Colombo (News 1st) குரங்குகளைப் பிடிப்பதற்காக தூரத்திலிருந்து இயக்கக்கூடிய சிறப்பு வகை கூடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கூடுகளைப் பயன்படுத்தி குரங்குகளை பிடிப்பதற்காக விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை அகற்றும் பணிகளுக்கு அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.

வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், அவற்றுக்கு உணவளிப்பதற்கு ஏதுவாக அனைத்து பயிர் நிலங்களிலும் அரை ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என விலங்கு நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட யோசனை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்களம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

Related posts

ETCA, Indo-US strategy detrimental to Lanka’s independence – Wimal

John David

பிணைமுறிகளின் மீள் விநியோகம் ஒத்திவைப்பு – ஷெஹான் சேமசிங்க

Lincoln

Institute of History will be established – President

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy