Sangathy
News

75 வருடங்களின் பின்னர் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு

Colombo (News 1st) இலங்கை 75 வருடங்களின் பின்னர் தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுதந்திரத்தின் போது நம்பிக்கைக்குரிய சமூக, பொருளாதார குறியீடுகளை கொண்டிருந்த இலங்கை, 75 வருடங்களின் பின்னர் தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலனித்துவ ஆட்சியாளர்களால் அழிவிற்குட்படுத்தப்பட்டு, 450 வருடங்கள் கடந்துள்ள போதிலும் சுதந்திரம் பெற்ற போது இலங்கை சிறந்த சமூக, பொருளாதார குறியீடுகளை கொண்டிருந்ததாகவும் 75 வருடங்களின் பின்னரும் இலங்கை தோல்வியடைந்த நாடாக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ‘த ஹிந்து’ பத்திரிக்கைக்கு வழங்கிய விசேட செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசியலில் அனைத்து மட்டங்களிலும் ஊழலே காணப்படுவதாகவும் நீதித்துறை, பொலிஸ் மற்றும் நிர்வாக சேவை உள்ளிட்ட ஜனநாயகத்தின் கோட்பாடுகள் சிதைவிற்குட்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சுதந்திர இலங்கை பல்வேறு இனங்கள் மற்றும் ஒன்றிணைத்த கட்சிகளைக் கொண்ட அரசாங்கத்தை உருவாக்கத் தவறியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தததாக ‘த இந்து’ செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்காசிய மன்ற நிறுவனமும் சென்னையிலுள்ள ஆசிய ஊடக கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த மெய்நிகர் கலந்துரையாடலிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

MPs’ brawl: Police seek Speaker’s opinion

John David

Bodies found in plane wreck on Philippines volcano

Lincoln

முச்சக்கர வண்டிக் கட்டணம் குறைப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy