உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்பு – ஒருவர் கைது!

 

பதுளை- பசறை, ஆக்கரதன்ன மற்றும் வவுனியா – கனகராயன்குளம் ஆகிய பகுதிகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பசறை ஆக்கரதன்ன பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட  தேடுதலின் போது நேற்று(30) மாலை இந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஆக்கரதன்ன பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று(01) பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள அதேவேளை, பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபரை எதிர்வரும் 08 ஆம் திகதி வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles