Sangathy
News

சீனி, கோதுமை மா விலை அதிகரிக்கப்பட மாட்டாது: நளின் பெர்னாண்டோ

Colombo (News 1st) எதிர்வரும் மாதத்திற்குள் சீனியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கங்களுடனான கலந்துரையாடலின் போது, இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்களிடம் காணப்படும் சீனி கையிருப்பு தொடர்பில் ஆராயுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கூறினார்.

அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு தாம் விடுத்த கோரிக்கையை இறக்குமதியாளர்கள் ஏற்றுக்கொண்டதற்கமைய, அடுத்த ஒரு மாதத்திற்கு சீனி விலை அதிகரிப்பு தொடர்பான சிக்கல் ஏற்படாது என அவர் தெரிவித்தார்.

கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலையையும் 195 ரூபாவை விட அதிகரிக்காதிருக்கவும் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளமைக்கு அமைய, வரி அதிகரிக்கப்பட்டாலும் கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்குமாறு நளின் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட உப குழுவின் ஊடாக முட்டை இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டார்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (14) அறிவித்திருந்தார்.

பால் மா இறக்குமதி செய்யும் அனைத்து நிறுவனங்களுடனும்  கலந்துரையாடி பால் மாவின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன்வைத்ததாக அமைச்சர் கூறினார்.

இதற்கமைய, மே 15 ஆம் திகதியில் இருந்து ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவால் குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் சில தினங்களில் இது தொடர்பான அறிவிப்பு இறக்குமதியாளர்களினால் வௌியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ICC suspends Devon Thomas on corruption charges

Lincoln

Fact Check: MSNBC’s Palestinian Loss of Land Map

Lincoln

அமைச்சரவை செயலாளராக W.M.D.J.பெர்னாண்டோ நியமனம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy