Sangathy
News

Melbourne பஸ் விபத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் காயம்

Colombo(News 1st) அவுஸ்திரேலியாவின் Melbourne நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 9 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

45 சிறார்களுடன் பயணித்த பஸ்ஸை பின்னால் வந்த ட்ரக் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 5 தொடக்கம் 11 வயதுக்கிடைப்பட்ட 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பலருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

9 மாணவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

49 வயதான பஸ்ஸின் சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

Related posts

சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Lincoln

An invitation to the Flat Earth Believers

Lincoln

UK unveils budget plans as thousands of workers stage strikes

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy