Sangathy
News

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Colombo (News 1st) வடக்கு, வட கிழக்கு, வட மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில், உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள திணைக்களம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவுவதாக  குறிப்பிட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் போதுமானளவு நீரை அருந்துமாறும், இயலுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இயலுமானவரை வெள்ளை அல்லது வெளிர் நிற  ஆடைகளை அணியுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணங்களை கண்டறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆலோசனையை பெற தீர்மானம்

Lincoln

As US watches on, China-Saudi relations grow in importance

Lincoln

நெடுந்தீவில் அறுவர் கொலை: பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy