Sangathy
News

X-Press Pearl கப்பலில் இருந்து இரசாயன கசிவு ஏற்படவில்லை – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான X-Press Pearl கப்பலில் இருந்து எந்தவிதமான இரசாயனங்களோ அல்லது எண்ணெய் கசிவோ ஏற்படவில்லை என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினருடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அதிகார சபையின் பொது முகாமையாளர் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.

இதன்போது எண்ணெய் அல்லது இரசாயன கசிவு ஏற்பட்டிருந்தமைக்கான சான்றுகள் இருக்கவில்லை என இலங்கை கடற்படையினரால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, கடற்பரப்பை மேலும் அவதானிப்பதற்காகவும் கடற்பரப்பிலிருந்து மாதிரிகளை பெறுவதற்காகவும் தமது அதிகார சபையின் விசேட குழுவொன்று கடற்பரப்பிற்கு சென்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கான 2ஆவது கடன் தவணைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

Lincoln

NMSJ accuses NPC members of affronting Constitution

Lincoln

Cruse and Jayasinghe invited to carry World Cup trophy

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy