Sangathy
News

கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ஏலக்காய் திருட்டு: மூவர் கைது

Colombo (News 1st) கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து அதிலிருந்த 9 ஏலக்காய் பெட்டிகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட ஏலக்காய் தொகையின் பெறுமதி 25 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பலோகம மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்த 39 வயதுக்குட்பட்ட மூவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஏலக்காய் தொகை வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று(29) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது முன்மொழிவு கையளிப்பு

Lincoln

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Lincoln

GMOF: Specialists hogging posts in Colombo at the expense of young docs

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy