பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகள் விற்பனை: முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பேலியகொடையில் கைது

Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்யும் இருவர் பேலியகொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை – துட்டுகெமுனு மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்கள் போதை வில்லைகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

பேலியகொடையில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 400 பேதை வில்லைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவை சேர்ந்த 28 வயதான இரண்டு இளைஞர்களே போதைவில்லைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles