Sangathy
News

IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இன்று(31) நாட்டிற்கு விஜயம்

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒக்கமுரா(Kenji Okamura) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(31) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களையும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கண்காணிக்கவுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத் திட்டத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், தடைகள் மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்கான வழிகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒக்கமுரா பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

Pakistan’s former PM Khan gets bail after arrest warrant

Lincoln

பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

Lincoln

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy