அமரர் நடராஜா இரட்ணசிங்கம் (காத்தான்)

பிறப்பு27 JUL 1951, இறப்பு20 MAY 2022

பிரபல வர்த்தகர் அரவிந் Textile உரிமையாளர், கொழும்பு மாவுதடல் அருள்மிகு காத்தவராய சுவாமி ஆலய தர்மகத்தா

வயது 70

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) தெமட்டகொடை, Sri Lanka Markham, Canada

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா இரட்ணசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நெஞ்சம் நிறைந்திட்டவரின். முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டவன் தந்த அருட்கொடையே எங்கள் அப்பா

அப்பா என்ற எங்கள் உயிர்மூச்சு நின்று போய்
ஆண்டு ஒன்று வந்தும் எங்களால் ஆறமுடியவிலை
அழுத கண்ணீரும் காயவில்லை அப்பா
கண்ணீர் கண்களை நித்தம் நிறைக்குதே
நிழல்போல் அழகுஅன்புருவம் தோன்றி மறைகிறதே
பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்
எங்கள் வாசல்கள் தோறும் வலம் வந்திட்டவர்
எங்களோடு இன்று இல்லையென்ற ஏக்கம் இன்னும் தான் எங்களை தினம் வாட்டுதே
இறைவன் விரைந்து அழைத்த மாயமென்ன
நித்தம் அப்பா முகம் காணத்தவிக்கின்றோம்
அப்பா அளவுன்றி சொரிந்திட்ட அன்பை பாசத்தை உங்களைவிட இனியாரிடம் பெறுவோம்
எங்கள் மனங்களில் கோயில் கொண்ட அப்பா
எங்கள் வாழ்க்கை பயணத்தில் நிறைவான ஆசிகளை தந்தவண்ணம்
எங்களை காத்தவராயசுவாமிகள் அருளோடு காத்தருள்வார்!

பாசமிகு மனைவி, பிள்ளைகள், மருமகன், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles