Sangathy
News

Telecom நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது: சரத் வீரசேகர

Colombo (News 1st) Telecom நிறுவனத்தை தனியார்மயப்படுத்த தாம் பரிந்துரைக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Telecom நிறுவனத்தை தனியார்மயப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் வௌியாகும் அச்சுறுத்தல் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர்  இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

Businesses can collapse due to electricity tariff increase next year– Patali

Lincoln

ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை

Lincoln

பெரும்போகத்தில் 13 வகையான போகப் பயிர்களை பயிரிட இணக்கம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy