நாட்டின் தென்மேல் பகுதிகளில் அதிக மழை

Colombo (News 1st) நாட்டின் தென்மேல் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles