கிழக்கு மாகாண ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

Colombo (News 1st) கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசியூடாக தமது வாழ்த்தினை   தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு பல உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியை கௌரவிக்கும் முகமாக நூற்றாண்டு விழாவை இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக செந்தில் தொண்டமான், தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles