Sangathy
News

Diego Garcia தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

Colombo (News 1st) பிரித்தானியாவிற்கு அருகிலுள்ள Diego Garcia தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு தகவல்களைக் கேட்டறிந்து வருவதாக வௌிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

குறித்த இலங்கையர்களுக்கு தமது விருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

20 மாதங்களுக்கும் மேலாக Diego Garcia தீவில் தங்கியுள்ள 89 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக பிபிசி சர்வதேச செய்திச்சேவை நேற்று(11) அறிக்கை வௌியிட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நிர்க்கதிக்குள்ளாகினர்.

கொவிட் தொற்று பரவிய காலப்பகுதியில் பிரித்தானிய இராணுவ வீரர்களை தனிமைப்படுத்துவதற்காக கட்டப்பட்ட தற்காலிக கூடாரங்களிலேயே குறித்த தங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் பிரித்தானிய பொலிஸார் தற்போது கவனம் செலுத்தியுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

Related posts

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

Lincoln

Bulgaria anti-government protesters take to streets for eighth day

Lincoln

Coronavirus crisis may get worse, worse and worse, WHO warns

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy