பொரளையில் விசேட சுற்றிவளைப்பு: 35 பேர் கைது

Colombo (News 1st) பொரளையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது 5 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் இருவரும் 3 கிராம் 15 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வரும் 3 கிராம் 15 மில்லிகிராம் கஞ்சாவுடன் நால்வரும் வாள்களை வைத்திருந்த இருவரும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று(12) புதுக்கடை மற்றும் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles