Sangathy
News

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Colombo (News 1st) முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பறங்கியாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார், விசேட அதிரடி படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்படுள்ளனர்.

இதன்போது மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட 03 உழவு இந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகள் மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்து மாங்குளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இன்று(12) அதிகாலை வன்னிவிளாங்குளம் மூன்றுமுறிப்பு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி காட்டு மரங்களை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரமொன்று பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக நட்டாங்கண்டல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

Can South China Sea help India rein in China in Ladakh?

Lincoln

Covid-positive Brazil president Bolsonaro says he feels ‘very well’, praises hydroxycholoroquine

Lincoln

76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy