Monday, February 9, 2026
Homeபேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு வலியுறுத்தல்

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு வலியுறுத்தல்

Colombo (News 1st) பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தினால் ஏற்கனவே பல நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தனவிடம் வினவிய போது,
பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.

எனினும், எதிர்வரும் நாட்களில் விலை குறைப்பு தொடர்பில் ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular