Sangathy
News

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் செயற்கை இறைச்சி விற்பனைக்கு அமெரிக்கா அனுமதி

United States: உலகின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும், இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வதை நிறுத்துமாறு பல அமைப்புகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஆய்வகத்தில் இறைச்சியை உருவாக்கும் முயற்சிகள் தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்தவண்ணமுள்ளன.

செயற்கை இறைச்சிக்கு அனுமதி வழங்குமாறு Upside Foods மற்றும் Good Meat ஆகிய இரண்டு நிறுவனங்களும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் (FDA) விண்ணப்பித்திருந்தன.

இந்நிலையில், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் (Lab-grown meat) இறைச்சியை அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோழி, மாடு போன்றவற்றின் உயிரணுக்களில் இருந்து நேரடியாக ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சியை நுகர்வோருக்கு வழங்க அனுமதியளிக்கும் இரண்டாவது நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.

ஏற்கனவே சிங்கப்பூரில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் Good Meat நிறுவனத்திற்கு சொந்தமான  Eat Just நிறுவனம், சிங்கப்பூரில் செற்கை இறைச்சியை விற்கிறது.
ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்படும் இந்த வகை இறைச்சியானது வளர்ப்பு இறைச்சி என்று வகைப்படுத்தப்படுகிறது.

மாடு, கோழியின் செல்களை பிரித்தெடுத்து அவற்றுடன் சில சத்துப்பொருட்களை கலந்து ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி உருவாக்கப்படுகிறது.

அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு ஒப்புதல் கிடைத்திருப்பது இறைச்சியை நமது உணவு மேசையில் சேர்க்கும் விதத்தை மாற்றும் எனவும் இது மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு மாபெரும் படி எனவும் Upside Foods நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

President inaugurates ‘Buddha Rashmi’ Vesak Zone

Lincoln

CB eases monetary conditions by reducing its interest rates

Lincoln

Cryptocurrency scam: three Lankans arrested

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy