64 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

Colombo (News 1st) 64 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹொரொயின் தொகையுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 கிலோ 193 கிராம் ஹெரோயின் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.

உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யும் போர்வையில் குறித்த ஹெரோயின் தொகை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ஹெரோயின் தொகை அடங்கிய கொள்கலனை ஏற்றிய கப்பல் பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து வந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்டுள்ள ஹொரோயின் தொகையை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சுதந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles